06 September 2023

மகிமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமை மாட்சிமை நிறைந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

 

                   மகிமை மாட்சிமை நிறைந்தவரே

                        மகிழ்வுடன் தொழுதிடுவோம்

                        பரிசுத்த தேவனாம் இயேசுவை

                        பணிந்தே தொழுகுவோம்

 

சரணங்கள்

 

1.         உன்னத தேவன் நீரே

            ஞானம் நிறைந்தவரே

            முழங்கால் யாவுமே

            பாரினில் மடங்கிடுதே

            உயர்ந்தவரே, சிறந்தவரே

            என்றும் தொழுதிடுவோம்                      - மகிமை

 

2.         ஒருவரும் சேரா ஒளியில்

            வாசம் செய்பவரே

            ஒளியினை தந்துமே

            இதயத்தில் வாசம் செய்யும்

            ஒளி நிறைவே அருள் நிறைவே

            என்றும் தொழுதிடுவோம்                      - மகிமை

 

3.         பரிசுத்த தேவன் நீரே

            பாதம் பணிந்திடுவோம்

            கழுவியே நிறுத்தினீரே

            சத்திய தேவன் நீரே

            கனம் மகிமை செலுத்தியே நாம்

            இன்றும் தொழுதிடுவோம்                     - மகிமை

 

4.         நித்திய தேவன் நீரே நீதி நிறைந்தவரே

            அடைக்கலமானவே அன்பு நிறைந்தவரே

            நல்லவரே நல்லவரே

            என்றும் தொழுதிடுவோம்

 

5.         இயேசுவே ராஜாதிராஜா என்றும் ஆண்டிடுவார்

            மகிமையில் சேர்த்திட பாரில் வந்திடுவார்

            முடிவு வரை நிலைத்திடவே

            என்றும் தொழுதிடுவோம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...