கிருபை மேல் கிருபை தாருமே
கிருபை
மேல் கிருபை தாருமே
நான்
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க
பெலத்தின் மேலே
பெலன் தாருமே
நான்
பரிசுத்தமாய்
வாழ்ந்திடவே -
2
1. உமது வருகையின்
நாள்
மிகவும்
நெருங்குதய்யா
தேவனை சந்திக்கவே
ஆயத்தமாகணுமே
இப்பொழுதோ
எப்பொழுதோ
எந்நேரம்
வந்திடலாம்
ஆயத்தமுள்ள
கன்னிகை போல
எண்ணெயை
நான் வைத்துக்
கொள்வேன்
மணவாளன்
பின்னே போல
மகிழ்ச்சியோடு
சென்றிடுவேன்
2. பெருங்காற்று
வந்து என்மேல்
மோதியடிக்குதைய்யா
பெருவெள்ளம்
வந்து என் மேல்
மோதியடிக்குதைய்யா
ஆனாலும்
விழவில்லை
கன்மலை
மேல் நிற்கின்றேன்
புத்தியுள்ள
வீட்டை நான் கன்மலை
மேல் கட்டிடுவேன்
3. பரிசுத்த
ஆவியினால் நிறைந்து
ஜெபிக்கணுமே
விசுவாசம்
தளர்ந்திடாமல்
முன்னேறிச்
செல்லணுமே
அசைவில்லா
ராஜ்ஜியத்தை
தருகின்ற
தெய்வமல்லோ
பயத்தோடும்
பக்தியோடும்
ஆராதனை
செய்திடுவேன்
- மணவாளன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment