நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்-1

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்

            நீ யாருக்கு

            வீண்பெருமைப் புகழ் ஆஸ்திக்

            குப்பை என்று தள்ளிடு

 

                        நீ துடைத்துப் போடும்

                        அழுக்கைப் போல காணப்பட்டாலும்

                        பின் வாழ்வுக்காக உலகை வெறுத்து

                        ஒதுக்கித் தள்ளிடு

 

1.         பெலவான்களை வெட்கப்படுத்தவே

            பெலவீனரை தேவன் தெரிந்து கொண்டாரே

            ஞானவான்களை பைத்தியமாக்கவே

            பைத்தியங்களை தேவன் தெரிந்து கொண்டாரே

 

                        நகையில பைத்தியம்,

                        புகையில பைத்தியம்

                        உடையில பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        மண்ணாச பைத்தியம்

                        பெண்ணாச பைத்தியம்

                        மயக்கமருந்து பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

                        சாராய பைத்தியம்,

                        பீர், ஜின் பைத்தியம்

                        ரம், விஸ்கி பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        காபி, டீ பைத்தியம்

                        பதவி ஆசை பைத்தியம்

                        ஆளுக்காக பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

2.         தேவன் முன்னிலே

            உலக செல்வம் அழியுமே

            உயர்ந்த ஆடைகள்

            பொட்டரித்து போகுமே

 

                        உலக ஞானமே

                        தேவன் பார்வையில்

                        முழுதும் பைத்தியம் என்று ஆகுமே

 

                        சினிமாவுல பைத்தியம்

                        சூதாட்டப் பைத்தியம்

                        பணத்துல பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        கட்சியில பைத்தியம்

                        வீண்பேச்சு பைத்தியம்

                        சிற்றின்ப பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

                        படிப்புல பைத்தியம்

                        நடிப்புல பைத்தியம்

                        பட்டிமன்ற பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        உணவுல பைத்தியம்

                        ஊர் சுத்தும் பைத்தியம்

                        மேல்நாட்டு பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

3.         கடவுள் பைத்தியம் என்று சொல்வது

            உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே

            சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்

            மீட்கப்பட்டவர்க்கு அது தேவபெலனாகும்

 

                        Mobile Phone பைத்தியம்

                        IPL பைத்தியம்

                        Seriel பாக்கும் பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        YOUTUBE பைத்தியம்

                        FACEBOOK பைத்தியம்

                        Whatsapp பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

                        TIKTOK பைத்தியம்

                        SElFIE எடுக்கும் பைத்தியம்

                        Status போடும் பைத்தியம்

                        எதற்கு நீ பைத்தியம்

 

                        Bike Race பைத்தியம்

                        பந்தா காட்டும் பைத்தியம்

                        Video Games பைத்தியம்

                        நீ எதற்கு பைத்தியம்

 

4.         தாழ்வும் உயர்வுமே

            இயேசுவுக்காகவே

            வாழ்ந்து நாமுமே

            இரத்த சாட்சியாகவே

 

                        ஏழ்மை வந்திடினும்

                        எதிர்ப்பு நேர்ந்திடினும்

                        வாழ்வும் இயேசுவுக்கே

                        என் சாவும் இயேசுக்கே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு