01 September 2023

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்

தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாய்கூட பிள்ளைகளை மறந்து போகலாம்

            சிங்கம்கூட குட்டிகளைப் பட்டினி போடலாம்

 

                        தாயினும் மேலாக அன்பு வைத்தவர்

                        இரத்தத்தையே சிலுவையிலே

                        உனக்குத் தந்தவர் மறந்திடுவாரோ

                        உன்னை வெறுத்திடுவாரோ - 2

                        நம்பிக்கையை விட்டு விடாதே - நீ

                        நம்பினவர் கைவிடமாட்டார்

 

1.         நீ அவரை தெரிந்து கொள்ளவில்லை

            அவரல்லவோ உன்னைத்

            தெரிந்து கொண்டார்

            நேற்று அல்ல இன்று அல்ல

            தாயின் கருவில் தோன்றும் முன்னே

 

2.         தேவன் உனக்குச் சொன்ன

            வார்த்தையெல்லாம்

            ஒன்றுகூட மாறிப் போவதில்லை

            நேற்றும் இன்றும் என்றும் மாறா

            தேவன் இயேசு மாறிடாரே - 2

 

3.         நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்

            உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும்

            கர்த்தருக்குக் காத்திருப்போர்

            வெட்கப்பட்டுப் போவதில்லை - 2

 

4.         உன்னை என்றும் நேசிக்கின்ற தேவன்

            உன்னை விட்டு விலகிப்போவதில்லை

            நித்தம் உன்னை நடத்திடுவார்

            நித்தியத்தில் சேர்த்திடுவார் - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...