13 September 2023

சகாயம் செய்யும் கன்மலையே

சகாயம் செய்யும் கன்மலையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சகாயம் செய்யும் கன்மலையே

                   சரணடைந்தேன் உம் சந்நிதி

                        தேவா சரணம் சரணம்

                        இயேசு ராஜா சரணம் சரணம்

 

1.         கை தூக்கி எடுத்தீரே

            கானங்களால் புகழ்வேன்

            சஞ்சலம் மாற்றினீர் சந்தோஷம் அளித்தீர்

            சங்கீதங்கள் பாடுவேன்

 

                        நன்றி இயேசு ராஜா

                        சரணம் இயேசு ராஜா - 2

 

2.         எதைக் குறித்தும் கலக்கமில்லை

            எபினேசர் இருப்பதினால்

            கருவில் கண்டவர் கைவிட மாட்டீர்

            காலமெல்லாம் போதும் நீரே - நன்றி

 

3.         வாழ்க்கை பயணத்திலே

            துணையாக வருபவரே

            காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்

            கரை சேர்க்கும் தெய்வம் நீரே - நன்றி

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...