கர்த்தர் பிறப்புப் பண்டிகையைக்
492.
இராகம்: ஸ்ரீரஞ்சினி ஆதி தாளம்
பல்லவி
கர்த்தர்
பிறப்புப் பண்டிகையைக்
கண்டேன்
மகிழ்ச்சி கொண்டேனே
அனுபல்லவி
அர்த்த ராவில் அருணோதயமே
அஅஆ! அஅஆ!
அஅஆ! ஆஆஆஆ!
- கர்த்தர்
சரணங்கள்
1. தெய்வ
ரூபம் தெளிவாகத்
தெரிந்தேன்
நன்றாய் எளிதாக
உய்யும் மார்க்கம்
உருவாகியதே-அஅஆ
- கர்த்தர்
2. தந்தை
வானில்; தாய் பூவில் சார்ந்த
கோயில் ஓராவில்
இந்தக்
குமரற் கிணை வேறிலையே-அஅஆ
- கர்த்தர்
3. ஞானம்,
வளர்ச்சி நரர்
தயவு நாதன்
கிருபைதனில்
வளர
தானம்
எனக்குத் தருவோரிவரே-அஅஆ
- கர்த்தர்
- சா. மோட்சக்கண்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment