06 September 2023

கல்வாரி நாயகனே இயேசுவே

கல்வாரி நாயகனே இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கல்வாரி நாயகனே இயேசுவே

                        கரைபோக்கும் திரு இரத்தமே

                        மீட்பின் தேவனே பரிகார பலியே

                        என்னுயிர் மீட்கவே உம் உயிர் ஈந்தீரே

 

1.         கொல்கதா மலையில் சிந்திய இரத்தத்தால்

            புத்திர சுவிகார உரிமை தந்தீர்

            அப்பா பிதாவே உம் அன்பிற்கு அளவில்லை

            என் உயிர் மீட்கவே உம் உயிர் ஈந்தீரே

 

2.         தரித்திரக் கோலமாய் நீர் பட்ட காயத்தால்

            ஐஸ்வர்யவானாகும் கிருபை தந்தீர்

            ஐஸ்வர்ய தேவனே உம் அன்பிற்கு அளவில்லை

            என் உயிர் மீட்கவே உம் உயிர் ஈந்தீரே

 

3.         ஆணியால் அடிப்பட்டு சிலுவையில் தொங்கியிதால்

            எனக்கு எதிரான எழுத்தை அழித்தீர்

            புதிய பிரமாணம் எனக்கு தந்தவரே

            என் உயிர் மீட்கவே உம் உயிர் ஈந்தீரே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...