கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்

கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.       கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்

            கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்

            குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்

            குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

 

2.         அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்

            நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு

            எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே

            ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

 

3.         கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி

            பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை

            என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே

            சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே