இம்மட்டும் கிருபை தந்த தேவா

இம்மட்டும் கிருபை தந்த தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        இம்மட்டும் கிருபை தந்த தேவா

                        இனிமேலும் கிருபை தாரும் மூவா

                        இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே

                        இயேசுவே நீர் என்னில் உருவாக்கவே உமை காணவே

 

1.         சோதிக்கப்பட்ட தூய தேவா

            சோதனையில் பெலன் தாரும் மூவா

            துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே

            இன்ப ஒளியை எனில் வீசியே

            இருள் நீக்குமே

 

2.         ஜெபத்தின் ஆவியை என் அகத்தில் ஊற்றும்

            ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க

            உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்

            உம் நாமத்தி-னால் நான் ஜெயிப்பேன்

            அல்லேலூயா

 

3.         நன்றியால் உள்ளம் பூரிக்குதே

            என்றும் உம்மில் நான் நிற்கவே

            அன்று உதிரம் நீர் சிந்தியதால்

            என்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்

            புரண்டோடுதே!

 

4.         பக்தியில்லை நான் ஆராதிக்க

            யுக்தியில்லை உம்மை துதிக்க

            சத்திய ஆவியின் வல்லமையால்

            சக்தியைத் தாரும் உத்தமராய்

            உம்மை துதிக்க          

 

5.         நன்றியால் உள்ளம் பூரிக்குதே

            என்றும் நின் கிருபை பொழிவதினால்

            அன்றுன் உதிரம் சிந்தினதால்

            இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்

            புரண்டோடுதே   

 

6.         சத்துருவான சாத்தான் என்னை

            நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே

            சாத்தானை ஜெயம் பெற்றிடவே

            சத்திய ஆவி வல்லமையை

            என்னில் ஊற்றும்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு