06 September 2023

சிட்டுக்குருவியே பட்டாம் பூச்சியே

சிட்டுக்குருவியே பட்டாம் பூச்சியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    சிட்டுக்குருவியே பட்டாம் பூச்சியே

                        உங்களைப் போலவே நாங்களும்கூட

                        ஆடிப் பாடிடவா மனதாலே

                        மனமெல்லாம் பரவசம்

                        மகிழ்ச்சியின் தனி ரகம்

                        இறைவனின் கைகளில் இருப்பதால்

                        கவலை இல்லையே

                        மனம் சிறகடிக்குதே

 

1.         எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பதில்தானே

            இயேசுவுக்கு மகிமை

            எது வந்த போதும் கலங்கிட வேண்டாம்

            குறைகள் நமக்கில்லை

 

                        அவர் சிறகில் இருப்பதினால்

                        சுமைகள் நமக்கில்லை

                        அவர் நிழலில் நடப்பதனால்

                        பயமும் ஏதும் இல்லை.

 

2.         வயல்வெளி மலர்கள் தருகின்ற பாடம்

            மனதெல்லாம் சிரிக்கட்டுமே

            பறக்கின்ற பறவைகள் தருகின்ற பாடம்

            கவலைகள் பறக்கட்டுமே

 

                        இயேசு தரும் இரக்கத்திற்கு

                        அளவுகள் ஏதுமில்லை

                        இயேசு வரும் நாளினிலே

                        துயரங்கள் நமக்கில்லை

           

 

           

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...