நல்ல போராட்டம் போராடி எல்லையை நாடு

நல்ல போராட்டம் போராடி எல்லையை நாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நல்ல போராட்டம் போராடி எல்லையை நாடு

            அல்லல் தொல்லை அணுகிடும் நில்லாமல் ஓடு

 

                        பாரம் பாவம் தள்ளி இலக்கை நோக்கி

                        நேராய் ஓடு தேவன் நியமித்த ஓட்டம்.

 

1.         பின்னானதை மறந்து மன்னோக்கியே ஓடு

            கன்மலை கிறிஸ்துவின்மேல் கண்பதித்தோடு

            இச்சையடக்கி ஓடிடுவாய் இங்குயாவிலும்

            உச்சிதமான அழியாக் கிரீடம் உனக்குண்டு

 

2.         எச் சமயத்திலும் சாத்தான் இடறல் செய்யினும்

            நிச்சயத்துடன் ஓடி பரிசைப் பெறுவாய்

            காடு மேடு கண்டு அஞ்சி களைத்து நில்லாதே

            கூடுதல் பெலன் அளிப்பார் குதித்தே ஓடுவாய்

 

3.         அசைந்து மாறும் இந்த லோக பந்தம் கலைந்து

            அசைவில்லாத நாட்டை நோக்கி ஆவலாய் ஓடு

            அக்கம் பக்கம் பார்த்திட்டாலும் அடைவாய் தோல்வியே

            எக்காளம் போல் நிற்கும்வரை எதிர்நோக்கி ஓடு

 

4.         ஓட்டம் முடியும் நாள் சமீபம் உள்ளம் போதிப்பார்

            பாட்டுப்பாடி ஆனந்திப்பாய் பரமன் வீட்டிலே

            நல்ல போராட்டம் போராடி ஓட்டம் முடித்து

            வல்ல விசுவாசம் காத்தால் நீதியின் கிரீடம்


            Nalla poaraattam poaradi ellaiyai naadu

            Allal thollai anukidum nillaamal oadu

 

                        Paaram paavam thalli ilakkai nhoakki

                        Naeraay oatu Devan niyamiththa oatdam.

 

1.         Pinnaanathai maranthu munnoakkiyae oadu

            Kanmalai kristhuvinmael kanpathiththoadu

            itchchaiyadakki oadituvai ingku yavilum

            Utchithamaana azhiya giriidam unakkundu

 

2.         Ech chamayaththilum saththan idaral seiyinum

            Nitchayaththudan oadi parichai peruvai

            Kaadu maedu kandu anchi kalaiththu nillaathae

            Kooduthal pelan alippaar kuthiththae oaduvaai

 

3.         Asainthu maarum intha loaka pantham kalainthu

            Asaivillaatha naattai noakki aavalaay oadu

            Akkam pakkam paarthitdaalum adaivai thoalviyae

            Ekkaalam poal nirkumvarai ethirnoakki oadu

 

4.         Oattam mudiyum naal sameepam ullam poathippaar

            Paattup paadi aananthippai paraman veettilae

            Nalla poaraattam poaraadi oattam mutiththu

            Valla visuvaasam kaathal neethiyin greedam

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு