06 September 2023

கையளவுமேகம் கண்களில் தெரியுதே

கையளவுமேகம் கண்களில் தெரியுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கையளவுமேகம் கண்களில் தெரியுதே

            பெருமழை இரச்சல் செவிகளில் கேட்குதே

 

                        மழை பெய்யுதே (2)

                        அபிஷேக மழை இன்று பெய்யுதே

                        மழை பெய்யுதே (2)

                        அக்கினி மழை இன்று பெய்யுதே

 

1.         மின்னல்கள் இடிமுழக்கம் எக்காளங்கள் தொனிக்குதே

            கர்த்தர் சபைநடுவில் அக்கினியாய் எழுந்தாரே

            மகிமையின் மேகம் எங்கும் ஆலயத்தை நிறைக்குதே

            தேவனின் பிரசன்னம் நம்மையெல்லாம் நிரப்புதே - மழை பெய்யுதே

 

2.         பலிபீட அக்கினியால் பாத்திரங்கள் நிரம்புதே

            கர்த்தரே தெய்வம் என்ற கர்ஜனைகள் தொனிக்குதே

            இருமன நினைவெல்லாம் நம்மை விட்டு விலகுதே

            ஒருமனம் ஒற்றுமை நம்மையின்று மூடுதே - மழை பெய்யுதே

 

3.         அபிஷேக அக்கினியின் காற்று நம்மேல் வீசுதே

            ஆவியானவர் அசைவாட வந்தாரே

            ஒழுங்கீனம் குறைகளெல்லாம் நம்மைவிட்டு மறையுதே

            கர்த்தர் எதிர்பார்க்கும் பரிசுத்தம் நிரப்புதே - மழை பெய்யுதே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...