29 September 2023

ஆவி ஆத்மா சரீரம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் இயேசுவுக்கே

                        ஆயுள் முழுவதும் தந்து உம் பணி செய்திடுவேன்

 

                        எல்லாம் இயேசுவுக்கே எல்லாம் இயேசுவுக்கே

                        (என்) ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் இயேசுவுக்கே

 

1.         காணாமல் போன ஆடு என்னை

            தேடி வந்தவரே

            கரத்தால் தூக்கி மார்பில் அனைத்து

            இதுவரை நடத்தினீரே

            அற்புதம் செய்பவரே அதிசயமானவரே

            இன்பம் தருபவரே எங்கள் இனியவர் இயேசுவே

 

2.         பாவியாய் இருந்த எந்தன் மேலே

            பாசம் வைத்தவரே

            கல்வாரி இரத்தம் எனக்காய் சிந்தி

            என்னை மீட்டவரே

            அற்புதர் இயேசுவே பரிகாரி ஆனீரே

            பெலன் தருபவரே எங்கள் பெரியவர் இயேசுவே

 

3.         எனக்காய் மரித்து மூன்றாம் நாளில்

            உயிரோடு எழுந்தவரே

            உம் சித்தம் செய்து உமக்காய் வாழ

            உள்ளம் ஏங்கிடுதே

            சர்வ வல்லவரே சாவை வென்றவரே

            பரலோகம் சேர்ப்பவரே மீண்டும் மகிமையாய் வருபவரே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...