தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்

                        நன்றி சொல்லிடவே-2

                        நாவும் போதாது நாளும் போதாது

                        ஆயுளும் போதாது-2

 

1.         வாழ்வின் வழியில் கால்கள் மேலும்

            தளர்ந்து வீழாமல்-2

            தாங்கி நடத்தலை நினைக்கையிலே

            என் கண்கள் நிறைகின்றதே - 2           - தேவன் செய்த

 

2.         பாவியாம் என்னை மீட்டிட இயேசு

            கல்வாரியில் தனது-2

            ஜீவன் தந்தது நினைக்கையிலே

            என் கண்கள் நிறைகின்றதே - 2           - தேவன் செய்த

 

3.         ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது

            என் பெயர்காயன்றோ-2

            சிலுவையின் அன்பை நினைக்கையிலே

            என் கண்கள் நிறைகின்றதே - 2           -தேவன் செய்த

 

4.         முள்முடி சூடி தொங்கப்பட்டது

            என் பெயர்க்காயன்றோ-2

            ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே

            என் கண்கள் நிறைகின்றதே - 2           -தேவன் செய்த


 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு