30 April 2024

நீ கடந்து வந்த பாதைகளை

நீ கடந்து வந்த பாதைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        நீ கடந்து வந்த பாதைகளை

                        அறிந்த தேவன் நான் அல்லவோ?

            நடத்திடுவேன் உயர்திடுவேன்

            என் திட்டங்களை உன் வாழ்வில் நிறைவேற்றுவேன் - 2

 

                        கைவிடுவேனோ கைவிடுவேனோ

                        உன்னை அழைத்த தேவன் நான் அல்லவோ? - 2

 

1.         என் தேவன் எங்கே நீ அழுத போது

            உன் சார்பில் வந்து தேற்றினேன்

                        உன் வலக்கரம் பிடித்து இது வரை நடத்தி

                        உந்தன் மேய்ப்பனாய் நான் இருந்தேன் - 2 - கைவிடுவேனோ

 

2.         நீ சிந்தின கண்ணீர் எல்லாம் அறிந்த தேவன்

            உனக்காக யாவும் செய்வேனே

                        உன் தாயின் கருவில் அழைத்த தேவன்

                        உன்னை நான் என்றும் மறப்பேனோ - 2 - கைவிடுவேனோ

 

3.         என் மீது நம்பிக்கை வைத்ததினால்

            உனக்காக பந்தியை ஆயத்தம் செய்தேன்

                        உன் தலையை எண்ணையால் அபிசேகித்தேன்

                        நன்மையும் கிருபையும் உன்னைத் தொடரும் - 2

 

 

- Dr. Pastor Jerson

 

 

 

https://www.youtube.com/watch?v=QII0QY8SArI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்

துதிப்பேன் உம்மையே துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்

                   நித்தம் உம்மை துதித்து கொண்டிருப்பேன்

 

1.         இன்பமானாலும் துன்பமானாலும்

            கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்

 

                        வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப் பாடுவேன்

                        வல்ல தேவன் உம்மை போற்றி பாடுவேன்

 

2.         கவலையானாலும் கலக்கமானாலும்

            நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும்

 

3.         மரணமானாலும் ஜீவனானாலும்

            பெலனானாலும் பெலவீனமானாலும்

 

4.         வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்

            புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்

 

 

https://www.youtube.com/watch?v=-vLubKj-vaw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...