மலையடி ஓரத்திலே மாடடையுங் கொட்டிலிலே


25.         செஞ்சுருட்டி                 ஆதி தாளம்

1.       மலையடி ஓரத்திலே மாடடையுங் கொட்டிலிலே
            கானப்புல் மெத்தையிலே ஏசுகாரணமாய்ப் பிறந்தாரே
                        காரணராக இத்தாரணி மீதில்
                        பூரணராக பிறந்தாரே என் சுவாமி
                        ஆரணம் பாடி அடிபணிந்தேற்றி
                        தோரணம் கட்டித் தொழுதிடவே வாரும்

2.         சாட்சியாய் கூறவந்த சர்வவல்லவர் தூதன்
            மாட்சிமையாயுரைத்த வார்த்தையது கேட்கிறீரோ
                        நாச்சியார் கன்னிமரியம்மாள் வயிற்றில்
                        மாட்சிமையுள்ள மதலையாய் பிறந்தார்
                        காய்ச்சின பாலும் கடையாலுமே கொண்டு
                        காட்சி காணவே கருதினாரே மேய்ப்பர்.

3.         வானத்திலே யுதித்த வழிகாட்டி வெள்ளியதால்
            ஞாலத்தின் சாஸ்திரிகள் நடந்தாரே காட்சி காண
                        ஞானத்தினாலே கண்ட சாஸ்திரிமார்கள்
                        தானத்திலே யுதித்த தற்பரனைக்காண
                        மேனத்தின் காணிக்கை கொண்டார்ப்பரித்தேவந்தார்
                        தானத்திலுள்ள சகோதரரே வாரும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு