31 August 2024

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே

                        ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே

                        ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே

                        ஆவியானவரே ஆவியானவரே

 

                        சித்தம் போல் என்னை நடத்துமே

                        உங்க விருப்பம் போல் என்னை வணையுமே - 2

 

                        ஆவியே தூய ஆவியே

                        வாருமே என் துணையாளரே

                        ஆவியே மகிமையின் ஆவியே

                        வாருமே என் மணவாளரே - 2 - ஆவியானவரே

 

1.         ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே

            ஊற்றுத் தண்ணீரே தாகம் தீர்த்திடுமே (தீர்ப்பவரே)

            அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே

            அசைவாடுமே ஆவியானவரே - 2

 

                        அன்போடு வரவேற்கிறோம் - 3 - ஆவியானவரே

 

 

- Zac Robert

காலை தோறும் உந்தன் கிருபை புதிதே

காலை தோறும் உந்தன் கிருபை புதிதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            காலை தோறும் உந்தன் கிருபை புதிதே

            மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில்

            உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும்

 

                        நீர் போதுமே நீர் போதுமே

                        என் வாழ்வில் நம்பிக்கை நீரே

 

1.         சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து

            பசியில் வாடி கிடக்கலாம்

            மழையின்றி வயல் வெளிகள் எல்லாம்

            பலன் அன்று போயிருக்கலாம் - 2

            கர்த்தாவே உம்மை தேடும் மனிதருக்கோ

            ஒருபோதும் ஒரு குறைவும் இல்லை - 2 - நீர் போதுமே

 

2.         வானம் பூமி யாவும் மாறினாலும்

            மாறாது உந்தன் வார்த்தையே

            வாக்குத்தத்தம் செய்த தேவரீர் நீர்

            என்றென்றும் உண்மை உள்ளவர் - 2

            சொன்னதை நிறைவேற்றுவீர் 'நிச்சயம்'

            உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே - 2 - நீர் போதுமே

 

 

- Ps. Solomon Robert

 

 

https://www.youtube.com/watch?v=wstXrlIrtBw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

நீரே ஆதாரம் என்று அறிந்தேன்

நீரே ஆதாரம் என்று அறிந்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நீரே ஆதாரம் என்று அறிந்தேன்

            என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்

            நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்

            நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று

            உணர்ந்துகொண்டேன்

 

                        தந்துவிட்டேன் முழுவதுமாய்

                        நம்புகிறேன் இன்னும் அதிகமாய்

                        என் சுக வாழ்வை நீர்

                        துளிர்க்க செய்யும் நேரம் இதுவே - நீரே

 

1.         எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்

            என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்

            எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்

            என்று நிறைவேறும் என்ற நிலைகள்

            காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்

            காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும்

            உம் சித்தம் அழகாக நிறைவேறும் - நீரே

 

2.         ஆசைகள் ஆயிரம் எனக்கிருந்தும்

            அனைத்தும் தந்தேன் உந்தன் கரத்தில்

            ஆழ்மனதில் அது வலித்தும்

            அதிலும் மேலாய் நீர் தருவீர் என்றேன்

            உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும்

            நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும்

            உம் திட்டம் தடையின்றி நிறைவேறும் - நீரே

 

                        என்னைவிட எனக்கெது சிறந்தது

                        என்று அறிந்தவர் அவரே

                        கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித் தந்து

                        கலங்காதே என்றவரே

                        என் நல்ல எதிர்காலம் அவரே

                        என் இதயமெங்கும் நிறைந்தவரே

 

 

- Solomon Jakkim J

 

 

https://www.youtube.com/watch?v=rGypGrVsLjA

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...