சீயோனே மகிழ் மங்கையே சித்திரமே பொற்பதமே


23.         பியாகு                                சாப்பு தாளம்

பல்லவி

          சீயோனே மகிழ் மங்கையே சித்திரமே பொற்பதமே

1.         சேயவதாரங் கொண்டுனின் நேய தூயா - ஒரு
            துரைராஜன் மரிபாலன் புவிமீது பிறந்தார்          - சீயோனே

2.         அண்டங்கள் உருவாமுன் அதிசித்ர ஒளியாய்
            அகிலத்து நடுமத்தியினிலுற்றுப் பிறந்தார்        - சீயோனே

3.         ஜெகஜோதி நவரத்ன மகுடாகி மனுவோன்
            சிசுவாகத்தையோடு புவிமீது பிறந்தார்                         - சீயோனே

4.         இசரேலர் கொண்டாட யாக்கோபியர் மகிழ
            இதமாகத் தவிதாது புவிமீது பிறந்தார்             - சீயோனே

5.         வாக்குத்தத்தங்கள் தவறாது சொற்படியே
            மடமாது இடமேவி புவிமீது பிறந்தார்               - சீயோனே

6.         பூலோகம் பரலோகம் பொருள் யாவும் படைத்தார்
            புவிமீதில் ஒரு மாதினிடமாகப் பிறந்தார்           - சீயோனே

7.         ஆயர்கள் கொண்டாட சாஸ்திரிகள் பணிய
            அனைமரியினெளிய முன்னணையிற் பிறந்தார் - சீயோனே

8.         சீயோனின் பவமறச்சாலேமியர் மகிழ
            ஜெகராஜன் நரர் நீசருருவாகிப் பிறந்தார்          - சீயோனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு