வந்தவர் ஆரையா இங்கே வந்தவர் ஆரையா


26.         செஞ்சுருட்டி             ஆதி தாளம்

பல்லவி

          வந்தவர் ஆரையா இங்கே வந்தவர் ஆரையா

1.         சுந்தரப்பரன் சொரூபமாய் - பரி
            சுத்தமோடு பெத்தலையில் உற்ற குடிலுக்குள்ளே          - வந்தவர்

2.         தேவனும் மனிதனுமாய் - தம்
            சிந்தையில் மகிழ்ந்து மாட்டு விந்தைத்தொழுவத்தினில்         - வந்தவர்

3.         பராபனொரு மகனோ - கெட்ட
            பாவிகளை ஆவலுடன் பூவிலெங்கும் தேடிக்கொண்டு   - வந்தவர்

4.         பரனுக்கும் மனிதனுக்கும் - பிணைப்
            பட்டு நடுப்பட்டு வினைப்பட்டுப் பரிதபிக்க        - வந்தவர்

5.         தூதர்கள் அதிபதியே - தீர்க்கர்
            சொன்னபடி உன்னதமாய் முன்னணையிலே படுக்க        - வந்தவர்

6.         இயேசுக் கிறிஸ்தனரே - உலக
            ரட்சகனாம் ரட்சகனென்றுச் சிதநாமத்தைக்கொண்டு    - வந்தவர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு