ஜெக ஜோதிப் பராபரனே


39.                                                                                      (202)

பல்லவி

                   ஜெக ஜோதிப் பராபரனே
                   ஜீவகுல ஜோபிதமணியே

1.         பெத்லேகம் பதியே புதரசிகாமணியே
            அத்தன் கிருபாநிதியெ - வெகு
            தத்துவமாகவே இத்தரை மீதினில்
            கர்த்தர் வந்தார் பதியே

2.         மாளிகையிலையோ மாட்டுக்கொட்டிலிலே
            மகிமையின் யூதா சிங்கமே - நீர்
            மாது கன்னியிடம் தாமே பிறந்ததும்
            மானிடர் பாவந்தானே

3.         அண்ணலார் சேனை ஆசனத் துறந்து
            அடிமை ரூபமெடுத்தார் - அவர்
            வெண் மலர்சீடர் தன்மலராகவே
            அத்தன் வந்தார் பதியே

4.         உலகில் பாவத்தை துலையறவே துறந்த
            உன்னத தேவ ஆடே - பற்
            றறத்துலைவிக்கு மெந்தன் பழகிய பாவத்தை
            இப் பாவிக்கு நேசர்தாமே

5.         அச்சம் விடுங்கள் மெய்ச்சுதன் பிறந்தார்
            அகிலத்திலுள்ளோரே - இப்போ
            நிச்சயம் ரட்சகர் தீர்க்கிறார்
            பாவத்தை நீசகுலத்தாரே

6.         சங்கைக்குருவே இங்கிதம் மொழியே
            எங்கள் தாவீதையனார் - நீரும்
            பொங்கிப் புகழ்ந்து சந்ததம் நீள
            துங்கனருள் செய்வாரே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு