கர்த்தாதி கர்த்தனின்று பெத்தலைப்பதி பிறந்தார்
34. இராகம் (ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம்)
1. கர்த்தாதி
கர்த்தனின்று பெத்தலைப்பதி பிறந்தார்
கானகத்தின் மேய்ப்பர் காண வானுலக சேனைபாட
தற்பரன் அற்புதன் இப்புவியிலே உதித்தார்
2. தங்க லோகம் விட்டு இங்கு சத்திரத்தில் தாழ்ச்சியுற்றார்
தங்கவிடம் அற்றவராய் மந்தை ஆவிதனிலுற்றார்
விந்தையாய் கந்தை பொதிந்தன்னை கற்பமுற்யவித்தார்
3. பாவியை ரட்சைசெய்ய பார்த்திபன் பட்சம்கொண்டார்
பட்சம் கொண்டார் பட்சம் கொண்டார் பாலன்
மிக பட்சம் கொண்டார்
தாவியே ஓடிப்போய் நம்பாலன் பதம் பணிந்திடுவோம்
4. கெம்பீரம் இங்கிதமாய் எங்குமிக கேட்குதின்று
கேட்குதின்று கேட்குதின்று கிறிஸ்தேசு
பிறந்தாரென்று
இங்கிதம் பாடிடுவோம் ஏசுமஹாராஜருக்கே
Comments
Post a Comment