அத்தன் மனுவானாரே
22. ஆனந்த பைரவி ஆதி
தாளம்
பல்லவி
அத்தன் மனுவானாரே
-- கிறிஸ்து நமதத்தன் மனுவானாரே
அனுபல்லவி
அத்தன் நமது மத்தியஸ்தன் மரியகன்னி வித்தனான
- அத்தன்
1. காலம் நிறைவேறினதால் - முன் சொன்னபடி
காலன் சத்தியவேத நூலன் நமது மரி பாலன்
ரட்சிப்பின் செங்கோலன் நல் பாலனான - அத்தன்
2. தந்தைக்கிணையானாரே - குமாரனே
தந்தை நின் பரம குழந்தை ஒருசிறு குழந்தை
எனவருதல்
விந்தை விந்தை விந்தை இதோ - அத்தன்
3. குற்றம் சுமந்த ஆடே - பிணையான தோடே
குற்றம் சுமந்து பவமுற்று மொழிய உதிரத்தைச்
சிந்திட
மத்தியஸ்தத்தைப் பாரென்று - அத்தன்
4. பட்ச மிகவானாரே - தவீது வேரே
பட்சம் பரமசபை மெச்சும்படி யன்பாக வச்சிரமணி
கவியின்
லட்சம் லட்சம் லட்சம் துதி - அத்தன்
Comments
Post a Comment