வாரும் பெத்தலை வாரும் வாரும் வரிசையுடனே வாரும்
30. இராகம் (தோத்திர பாத்திரனே)
சங்கராபரணம் ஆதிதாளம்
(கி.கீ. 389) (கீ.கீ 661)
1. வாரும் பெத்தலை
வாரும் வாரும் வரிசையுடனே வாரும்;
வாருமெல்லாரும் போய் வாழ்த்துவோம் மேசுவை
வாரும் விரைந்து வாரும்.
2. எட்டி நடந்துவாரும் அதோ சற்றே நிமிர்ந்து பாரும்
பட்டணம்போல் சிறு பெத்தலை தெரியுது வாரும் விரைந்து வாரும்.
3. ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை
ஆதி திரித்துவ தேவமகத்துவராயினர் இது புதுமை
4. விண்ணுலகாதிபதி தீர்க்கர் சொன்னதிலுள்ளபடி
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனாயுதித்தார்
5. சொல்லுதற்கரிதாமே ஜோதிசுந்தர சோபனமே
புல்லணையில் பசு முண்ணணையில் ஆபூ வதிபன் பிறந்தார்
6. மந்தை மாடடையில் மாது மரியவள் மடிதனிலே
கந்தைத் துணிமீது விந்தைத்திருமகன் காரணரா
யுதித்தார்
7. தூதர்கள்
பறந்து வந்து தேவ துத்தியங்கள் பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு
நாட
8. உன்னத மதிலுண்டாம்
பிதாவுக்கோசியன்னா மகிமை
இன்னிலமதிலுள்ள
மன்னுயிர்க்குண்டாம் எழில்பிரியம் பொறுமை
Comments
Post a Comment