தருணம் மழை ஈயும் நாதனே

தருணம் மழை ஈயும் நாதனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

327. இராகம்: ஆனந்தபைரவி                    ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          தருணம் மழை ஈயும், நாதனே

          சருவேசா, அதி நேசா, பவ நாசா, ஈசா

 

                             சரணங்கள்

 

1.         தருணம் அருள் ஈசனே, தவிக்கிறோம், மா ராஜனே

            கிரணம் ஒளிர் உல்லாசனே, கிலேசம் அகற்றும் நேசனே - தரு

 

2.         பூமி வறண்டு போனதே, புற்கள் வாடல் ஆனதே;

            ஸ்வாமி, நன்மழை ஊற்றுமே, தாபம்[1] அனைத்தும் மாற்றுமே - தரு

 

3.         வெப்ப மிகுந்த தையனே, வேதனை உதவாய், துய்யனே!

            எப்படியும் மழை பொழிந்தே இரக்கம் செய்வாய், மெய்யனே - தரு

 

4.         ஜீவன் யாவும் மாளுதே, தினமும் துயரம் நீளுதே;

            தேவே திருக்கண் பாருமே, செழிக்க நல் மழை தாருமே - தரு

 

5.         பஞ்சமே பறந்தோடவே, பணிந்துனைக் கொண்டாடவே,

            கெஞ்சும் அடியர் கூடவே, கிருபை அருள் நீடவே - தரு

 

6.         அல்லும் பகலும் அழுகிறோம்; ஆற்றும் பரனே தொழுகிறோம்;

            பொல்லார் எனவே விழுகிறோம்; பொழியும் மழையை எழுகிறோம் - தரு

 

- ச. யோசேப்பு

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] துன்பம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு