செய்ய வேண்டியதைச் சீக்கிரம்


செய்யவேண்டியதைச் செய்

261. (337) கமாஸ்                                          ஆதிதாளம்
பல்லவி
            செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
            செய், செய், செய், செய், செய்.

சரணங்கள்

1.         வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
            மகிமை பெருமை பொருளானதுவும்
            வெய்யவன்[1] கண்ட பனிபோலாம்; இது
            மெய், மெய், மெய், மெய், மெய். - செய்

2.         ஆவியும் கூடுவிட் டேகாமுன்,
            ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்,
            தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
            சேர், சேர், சேர், சேர், சேர். - செய்

3.         அவ்வியம்[2] பெருமை அகந்தையும் அசுத்தமும்
            அகற்றி நீ அனுதினமும்
            திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
            செல், செல், செல், செல், செல். - செய்

4.         துர்ச்சன ரோடுற வாகாமல், ஐயன்
            துய்ய விதி பத்து மீறாமல்,
            உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்-து
            உய், உய், உய், உய், உய். - செய்

- ஈ. பாக்கியநாதன்


[1] சூரியன்
[2] பொறாமை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு