அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை


அறுப்போ மிகுதி

268. (80 L.) மணிரங்கு                                             ஏகதாளம்

பல்லவி

             அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை,
             அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே.

சரணங்கள்

1.         இந்திய தேசம் எங்கும் இருள்
            எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. - அறு

2.         எமைப்புரந்த[1] யேசுநாமம்
            எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. - அறு

3.         வசன அமுதை வார்க்கும் நல்ல
            வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. - அறு

4.         நாடு நகரம் காடுமேடு
            நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். - அறு

5.         போதகன்மார் ஆவியோடுன்
            புகழைஓதவே, மிகுப்பொய்யை மோதவே. - அறு

6.         எண்ணில்லாத ஆத்துமாக்கள்
            ஏங்கிநையுதே, மிகவும் இளைத்துத்தொய்யுதே. - அறு

7.         ஏழையடியார் மனுக்கிரங்கும்
            எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா. - அறு

- ம.ப. அருளப்பன்


[1] காத்த

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே