எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே
எல்லாம் யேசுவே
225.
(212) சங்கராபரணம் ஆதி
தாளம்
பல்லவி
எல்லாம் யேசுவே,-எனக்கெல்லா மேசுவே.
அனுபல்லவி
தொல்லைமிகு
மிவ்வுலகில்-துணை யேசுவே. - எல்
சரணங்கள்
1. ஆயனும்
சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும்
எனக்கன்பான ஞானமண வாளனும், - எல்
2. தந்தைதாய்
இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
சந்தோட
சகலயோக, சம்பூரண பாக்யமும், - எல்
3. கவலையில்
ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
கஷ்டநோய்ப்
படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், - எல்
4. போதகப்
பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு
செய்திடுங் கூட்டாளிமென் தோழனும், - எல்
5. அணியும்
ஆபரணமும் ஆஸ்தியும்-சம்பாத்யமும்
பிணையாளியும்[1]
மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும், - எல்
6. ஆன
ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞானகீதமும்
சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும், - எல்
- யே. ஞானமணி
Comments
Post a Comment