20 April 2019

சரணம் நம்பினேன் யேசு நாதா


சரணம் நம்பினேன்

296. (9) நாதநாமக்கிரியை                              சாபுதாளம்

பல்லவி
           சரணம் நம்பினேன் யேசு நாதா-இது

அனுபல்லவி

            தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. - சரணம்

சரணங்கள்

1.         நின் அருளால் இங்கே வந்து,-என்றும்
            நின் அடைக்கலமாக என்னையே தந்து,
            முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி
            மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. - சரணம்

2.         சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்
            தாயான கருணை உனக்கு உண்டென்றே,
            சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்
            சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. - சரணம்

3.         அலைவாய்த்[1] துரும்புபோல் ஆடி,-உன
            ததி கருணை வரச் செம்பாதந் தேடித்,
            தொலையாத வாழ்வை மன்றாடி,-அன்பின்
            தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. - சரணம்

4.         இனிய கருணை பொழிவேதா,-எனை
            இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா,
            கனி வினை நீக்கிய நீதா,-நசரைக்
            கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. - சரணம்

- தஞ்சை சத்தியநாதன்


[1] அலையில் அகப்பட்ட

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...