16 April 2019

ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே

கி.கீ:210

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆதாரம் நீதான் ஐயா

 

210. (118 L.) சஹானா                                             ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                        ஆதாரம் நீ தான் ஐயா, என்துரையே,

                        ஆதாரம் நீ தான் ஐயா.

 

                             அனுபல்லவி

 

            சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில். - ஆதாரம்

 

                             சரணங்கள்

 

1.         மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்

            மற்றோர்க்குப் பற்றேதையா, எளியன்மேல்,

            மற்றோர்க்குப் பற்றேதையா, எளியனுக்கு - ஆதாரம்

 

2.         நாம், நாம் துணையென நயந்துரை சொன்னவர்

            நட்டாற்றில் விட்டாரையா; தனியனை

            நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு - ஆதாரம்

 

3.         கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே,

            வற்றாக் கிருபை நதியே, என் பதியே[1],

            வற்றாக் கிருபை நதியே, என் பதியே - ஆதாரம்

 

4.         சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து

            துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே[2]

            துக்கம் மிகுவேளையில், உன் தாசனுக்கு - ஆதாரம்

 

 

- அருள்திரு. ஆ. தேவதாசன்

 



[1] தலைவன்

[2] இன்பம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...