அஞ்சாதே யேசு ரட்சகர்


இயேசு ரட்சகர் ஆத்துமத் துயர் நீக்க வல்லவர்

231. (250) கரஹரப்பிரியை                                       ரூபகதாளம்

பல்லவி
           அஞ்சாதே யேசு ரட்சகர்
          ஆத்மத்துயர் நீக்க வல்லவர்.

அனுபல்லவி
            வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று. - அஞ்

சரணங்கள்
 1.        திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
           திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்-கு
           அருள் பெற்றான், என் வேதஞ் சொல்வதை
           ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ்

2.        வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
           வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,
           துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே,
           தூதர் சங்கமும் களிப்பதாலே. - அஞ்

3.        மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
           வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்,
           வாய்ப்புடன் மனம் மகிழும் போலே,
           மானுவேலுனைத் தழுவலாலே. - அஞ்

4.        தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
           துயரடை பாவி யொருவன் மீதினில்
           எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
           இரட்சிப் புனக்குப் பலித்ததாலே. - அஞ்

5.        மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
           வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
           தருணம் ஈதெனத் தாசர்கூடிச்,
           சாற்றும் மொழியை ஏற்று நீவர. - அஞ்

- ச.ஐ. பாளையங்கோட்டை.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு