16 April 2019

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ


தேவ பிதா என்றன் மேய்ப்பன்

216. (245) ஹரிகாம்போதி                                        ஆதி தாளம்

பல்லவி

            தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
            சிறுமை தாழ்ச்சி அடைகிலனே.

அனுபல்லவி

            ஆவலதாய் எனைப் பைம்புன்மேல்
            அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார். - தேவ

சரணங்கள்

1.         ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி,
            அடியேன் கால்களை நீதி என்னும்
            நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
            நிதமும் சுகமாய் நடத்துகின்றார். - தேவ

2.         சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
            சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே;
            வானபரன் என்னோடிருப்பார்,
            வளை தடியும் கோலுமே தேற்றும். - தேவ

3.         பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
            பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்,
            சுக தயிலம் கொண்டென் தலையைச்
            சுபமாய் அபிஷேகம் செய்குவார். - தேவ

4.         ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
            அருளும் நலமுமாய் நிரம்பும்,
            நேயன் வீட்டினில் சிறப்போடே
            நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன். - தேவ

- த. யோசேப்பு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...