எது வேண்டும் சொல் நேசனே


சுத்த ஜலம் வேண்டுமோ?

262. (371) முகாரி                                          சாபுதாளம்

பல்லவி

                   எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
                   கெதுவேண்டாம், என் நேசனே?

சரணங்கள்
1.         மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
            மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
            துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
            சுத்த ஜலம் வேண்டுமோ? - எது

2.         வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
            மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
            தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
            தண்ணீ ருண்ண வேண்டுமோ - எது

3.         பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
            பான முண வேண்டுமோ?-அன்றித்,
            தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
            தண்ணீ ருண்ண வேண்டுமோ? - எது

4.         சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
            தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
            பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
            பானமது வேண்டுமோ? - எது

5.         இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம், நடுக்கம், வெட்கம்,
            இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
            திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
            தெளிந்த தண்ணீர் வேண்டுமோ? - எது

- ஐ.ர. ஆர்னால்டு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு