16 April 2019

ஆத்தும அடைக்கலம் அன்புள்ள

கி.கீ:237

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             ஆத்தும அடைக்கலம்

 

237. (262) நாதநாமக்ரியை.                                      ஆதிதாளம்.

 

                             கண்ணிகள்

 

1.       ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே,

            அய்யா, புகலிடம் தாரும்;

            காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம்,

            கைகொடுத் தெனை ஆற்ற வாரும்.

 

2.         நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம்;

            நீசன் எனக்கு வேறார் அய்யா?

            சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித்

            தாங்கும் உன் மறைவினில், அய்யா.

 

3.         நீதம் கெட்ட பாவியான், நீதி பரி சுத்தமும்

            நிறைந்த நீர் எனக்குத்ர வாதி;

            பாதகத்தால் நிறைந்த பேதையான்; கிருபை சத்தியம்

            பரிபூரணம் உள்ளோன் நீர் ஜோதி.

 

4.         எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டும்மில்,

            என் பாவம் தீர்த்தருளும், கோவே!

            நொந்த எனை நீர் ஆற்றிச் சிந்தையைப் புதுப்பித்து

            நோக்கும் அதைத் துய்யதாய்[1], தேவே.

 

5.         சீவ ஊற்றே, உம்மில் யான் தெளிந்து குடிப்பேனாக;

            தீராத தாகங்கள் தீரும்;

            ஓவா[2] நித்தியமட்டாகப் பாவி என் நெஞ்சில் ஊறும்

            உன்னத அன்பன் யேசு, வாரும்.

 

 

- அருள்திரு. அ. வேதக்கண்



[1] தூய்மை

[2] ஓயாத

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...