16 April 2019

ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை

கி.கீ:242

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             இன்ப காலமல்லோ ஜெபவேளை?

 

242. (239) பைரவி                                         சாபுதாளம்

 

                             பல்லவி

 

          ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை

            ஆனந்த காலமல்லோ?

 

                             அனுபல்லவி

 

                        பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்

                        பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ!

 

                             சரணங்கள்

 

1.         துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி,

            அம்பர[1] வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி,

                        கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்

                        கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். - ஆ!

 

2.         ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று,

            தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை[2]-ஜெகத்தில் எறிந்துவிட்டு,

                        ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,

                        அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். - ஆ!

 

 

- அருள்திரு. ம. வேதமாணிக்கம்



[1] வானோர்

[2] உடல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...