மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து
இயேசுவை வாழ்த்திப் போற்றும்
255. (266) தோடி சாபுதாளம்
பல்லவி
மகிழ்ந்து,
புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும், என்
ஆத்துமாவே.
அனுபல்லவி
தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம்
தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்
- மகிழ்ந்து
சரணங்கள்
1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு;
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு;
விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு;
வீரமாய் மறை கூறும் சத்தியமே,
நயமே, ஜெயமே-திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
தேறுவாய், களி கூருவாய் தினம் - மகிழ்ந்து
2. அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது;
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே,
நண்ணியே,[1] உன்னியே,-மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின்
மூடி,
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக -
மகிழ்ந்து
-
மரியான் உபதேசியார்
Comments
Post a Comment