மாற்றீர் என் கவலை அருள்பெற


மாற்றீர் என் கவலை

238. (263) சங்கராபரணம்                                ஆதிதாளம்

பல்லவி

                        மாற்றீர் என் கவலை அருள்பெற
                        மாற்றீர் என் கவலை;-மிக
                        மாற்றியே கலி தீர்த்தீர் உமது
                        மகிமையை நிறைவேற்றி.
சரணங்கள்
            1.         சமனவரசே,[1] நீர் தந்தை
                        சமனவரசே, நீர்-ஒரு
                        சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்,
                        தாசனுரு வெடுத்தீர். - மாற்றீர்

            2.         சூதலகையை நீக்கி, அழலின்
                        சூதலகையை நீக்கி,-என் கை
                        தூக்கி, உலகிடர் போக்கி, எமையே
                        துதிக்கவும் மயலாக்கி.[2] - மாற்றீர்

            3.         சடலமுலகம் சூது, பொல்லாச்
                        சடலமுலகம் சூது;-இது
                        தகாததின் மடவாது கொடியது;
                        சஞ்சலம் இனி யேது? - மாற்றீர்

            4.         நலங்கடமை[3] வழுவி, சுகிர்தன்
                        நலங்கடனை[4] வழுவி,-வழி
                        நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
                        நலமாக்கவே வருவீர். - மாற்றீர்

- வே. சாஸ்திரியார்


[1] வானவர் அரசே
[2] ஆசையாக்கி
[3] நலன்கள் தமை
[4] நல்ல கட்டளையை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு