நினையேன் மனம் நினையேன் தினம்
நினையேன் மனம்
206. (209) நாதநாமக்ரியை ரூபக தாளம்
பல்லவி
உனை மீட்ட
யேசுவையே.
அனுபல்லவி
சரணங்கள்
1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப்,
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச்
சிறந்து,
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர்[1] கதியை.
- நினை
2. நரக அழலாலே[2] கெடு
நாசம் வந்த காலே
உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன்
இணங்கி,
பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத்
தாக்கி,
பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி
அறைந் தோன். - நினை
3. ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும்,
மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே.
- நினை
-
ஆ. அல்லின்
Comments
Post a Comment