16 April 2019

வேத வசன விதைகளைப் புவியில்


வேத வசன விதைகளை
250. செஞ்சுருட்டி                                                    ஆதி தாளம்

பல்லவி

          வேத வசன விதைகளைப் புவியில்
          விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்.

அனுபல்லவி

            பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
            பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். - வேத

சரணங்கள்

1.         அதிசய வசனம் இந்திய கரையில்
            ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே,
            நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே,
            நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. - வேத

2.         தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்,
            தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்,
            நேயமாய் மனதில் இறுகவே நின்று
            நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். - வேத

3.         நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
            நடனமுடை சபைமிகக்கூடச்
            சாலவே மக்கள் இன்னிசை பாடச்
            சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட - வேத

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...