20 April 2019

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்


மரித்தோர் உயிர்த்தெழுவார்

277. (343) குரஞ்சி                                                  ஆதிதாளம்

பல்லவி

                    மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
                    வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி
                        எரி புகை மேக ரத மேறி
                        ஏசு மகா ராஜன் வருங்கால். - மரித்தோர்

சரணங்கள்

1.         தூதர் மின் னாற்றிசை துலங்க,[1]
            ஜோதி வான் பறை இடி முழங்க,
            பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
            பரிசுத் தோர் திரள் மனதிலங்க. - மரித்தோர்

2.         வானம் புவியும் வையகமும்
            மட மட வென்று நிலை பெயர,
            ஆன பொருளெல்லாம் அகன் றோட,
            அவரவர் தம் தம் வரிசையிலே. - மரித்தோர்

3.         அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
            அழியா மேனியை அணிந்திடுவார்;
            எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
            என்றும் வாழும் ஜோதிகளாய். - மரித்தோர்
- சு.ச. ஏசடியான்


[1] தூதர் ஒளி நான்கு திசைகளிலும் விளங்க

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...