ஜெப சிந்தை எனில் தாரும்


ஜெப சிந்தை எனில் தாரும்

239. (213) நாதநாமக்ரியை                             சாபுதாளம்

பல்லவி

            ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை

அனுபல்லவி

                        அபயமென் றுனக்குக்கை
                        அளித்தேன் பொற்பாதா. - ஜெப

சரணங்கள்

1.         உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல
            கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
            தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ
            தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச.[1] - ஜெப

2.         இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என்
            இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்;
            சடமுலகப் பேயை வெல்லும்-நற்
            சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். - ஜெப

3.         ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா
            நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
            பேய்க்கண மோடுபோர் செய்ய,-நல்
            ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. - ஜெப

- சா. சீமோன்


[1] உள் சுவற

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு