இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்


இயேசு நேசிக்கிறார்

217. (211) சரமா                                            சாபு தாளம்
பல்லவி

            இயேசு நேசிக்கிறார்,-இயேசு நேசிக்கிறார்;
            இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
                        தென்ன மா தவமோ!

சரணங்கள்

1.         நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
            மாசில்லாத பரன் சுதன்றன் முழு
                        மனதால் நேசிக்கிறார். - இயேசு

2.         பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
            நரராமீனரை நேசிக்கிறாரென
                        நவிலல்[1] ஆச்சரியம். - இயேசு

3.         நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
            நீதன், இயேசெனை நேசிக்கிறாரெனல்
                        நித்தம் ஆச்சரியம். - இயேசு

4.         ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
            அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
            ஆவலாய்ப் பறப்பேன் - இயேசு

5.         ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்,
            ஈசன் யேசெனைத் தானேசித்தாரென்ற
            இணையில்[2] கீதஞ் சொல்வேன். - இயேசு

- பிரெக்கன் ரிஜ்


[1] சொல்லுதல்
[2] ஒப்பில்லாத

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு