நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே


நல்வழி, மெய், ஜீவன்

204. (248) புன்னாகவராளி                               சாபு தாளம்

பல்லவி
           நல்வழி, மெய், ஜீவன் எனும் நாம தேயனே,-உனை
           நம்பினேன், ஏழைக்கிரங்கி ஆள், என் நாயனே.

அனுபல்லவி
             செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர-நர
            ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே, வினைதீர;
            திருமறை வேதா, அருள் நிறை போதா,
            கருணை மெய்த் தாதா, உரிமையுள்ளெம் யேசுநாதா! - நல்

சரணங்கள்
 1.         சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே;-அந்த
            சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே;
            சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே;-அதின்
            சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே;
            தொழுதகம் நேர்ந்தேன், அழுதகம் ஓர்ந்தேன்,[1]
            எளியனுள் சோர்ந்தேன், முழுதுமே சார்ந்தேன் உனதடி - நல்

2.         செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே-நல்ல
            ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே;
            முத்தி நெறி காட்டும் மார்க்கம், சுத்த நல் தேனே,-அதின்
            மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ, கோனே;
            முடவியல் மாற, நடையது தேற,
            அடமது மாற,[2] திடமனதாய்க் கரையேற. - நல்


­- யோ. பால்மர்

[1] ஆராய்ந்தேன்
[2] ஓட

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு