ஆ யேசுவே நீர் எங்களை


ஆ யேசுவே காரும்

298. (1 L.) சங்கராபரணம்                                ரூபகதாளம்

கண்ணிகள்

1.         ஆ யேசுவே நீர் எங்களை
            அன்பாகச் சேர்ந்துமதாவியை
            நேயா அருள் அனுக்ரகத்தையும்
            நிமலா தந்து காரும்.

2.         பரந் தன்னில் நீர் பரிசுத்தர், மா
            பரிசுத்தர், மா பரிசுத்தரே,
            பரனே சேனைப்பரனே என்று
            பகர்ந்தே பார்க்குமளவும்.

3.         வாயும் மையே போற்றி எங்கள்
            மனம் நின் அன்பை ருசிக்க நற்ச
            காயா விசுவாசந் தந்து
            காரும் எம்மைப் பாரும்.

4.         மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்
            மூலோகமும் ஆளும்பரா
            தேவா தந்தை சுதனாவியே
            தினமுந்துதி உமக்கே.

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே