நீதியாமோ நீ சொல்லும் ஓய்
ஆதுலர்க்கீவதே பாக்கியம்
274. (298) பியாகு ஆதி
தாளம்
பல்லவி
நீதியாமோ? நீ சொல்லும்,-ஓய்!
நெறியுளோரே, அறம் செய்யாதிருந்திடில்.
- நீதி
சரணங்கள்
1. ஆதுலர்க்[1] கீவதே
பாக்கியம்;-பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம்;-ஓகோ!
பாதகம் செய்யில் நிர்பாக்கியம்;-மோட்ச
பாதை நடக்கில் சிலாக்கியம். - நீதி
2. தரித்திரர்க் கிரங்குவோன் உடனே-இடுவான்
தற்பரனுக் கவன் கடனே,-என்று
கருத்துடன் சுருதியில் திடனே-உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே. - நீதி
3. அன்புடன் விதவையும் போட்ட-காசை
அதி வியப்பாய் யேசு காட்டப்,-புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட,-அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட. - நீதி
4. பிறர் புகழும்படி இன்றே-செய்தால்,
பிரயோசனமில்லை என்றே,-பரன்
மறையதில் விளம்பினார் நன்றே;-அம்
மாதிரி விலகாது நின்றே. - நீதி
5. பரிதானம் வாங்குதல் தீது;-அதைப்
பறித்தறம் செய்தல் தகாது;-உமக்
குரியதில் ஈவது போதம்,-இதில்
ஊன்றி இருப்பதே நீதம். - நீதி
6. ஏழைகளுக் கீயாது ஆஸ்தி-ஐயே!
ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி-இதோ?
வாழுல கடைந்திடில் நேர்த்தி;-என்றும்
வாழலாம், அதுவே மா பூர்த்தி. - நீதி
-
ச. யோசேப்பு
Comments
Post a Comment