வாரா வினை வந்தாலும் சோராதே


வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

235. (259) நாதநாமக்ரியை                          சாபுதாளம்

பல்லவி
            வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
            வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்
1.         சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
            சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. - வாரா

2.         உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
            உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. - வாரா

3.         பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
            பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. - வாரா

4.         தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
            தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. - வாரா

5.         மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
            மருள விழாதே, நல் அருளை விடாதே. - வாரா

6.         வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
            வானவனை முற்றும் தான் அடைவாயே! - வாரா

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு