பாக்கியர் இன்னார் என்றிறைவன்


பாக்கியர் இன்னார்

252. (265) சங்கராபரணம்                                ஆதி தாளம்

பல்லவி

                   பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
                   பண்புடன் சொன்னார்.

அனுபல்லவி

            ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
            அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், - பாக்

சரணங்கள்

1.         ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்,
            பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
            தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். - பாக்

2.         துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
            விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
            மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். - பாக்

3.         சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
            வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
            மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். - பாக்

4.         நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
            போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
            காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். - பாக்

5.         இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
            நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
            காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். - பாக்

6.         சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
            பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
            பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். - பாக்

7.         சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம்[1] வாதத்தைத்
            தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
            நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். - பாக்

8.         நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
            துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
            சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். - பாக்

- த. யோசேப்பு


[1] உபத்திரவம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு