20 April 2019

ஆண்டவரின் நாமமதை ஈண்டு

கி.கீ:256

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             ஆண்டவரின் நாமம் ஈண்டு போற்றுவேன்

 

256. (267) சஹானா                                        ஆதிதாளம்

 

                             கண்ணிகள்

 

1.       ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன்;-அவர்

            ஆளுகையின் நீதி அன்பின் வாழி[1] சாற்றுவேன். - ஆண்

 

2.         உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன்;-மன

            உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம்[2] தள்ளுவேன். - ஆண்

 

3.         கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை-மதி

            கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை. - ஆண்

 

4.         வஞ்சகங்களை உகக்கும்[3] நெஞ்சை நீக்குவேன்;-பொல்லா

            மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன். - ஆண்

 

5.         மற்றவனை ஏசி வாயால் குற்றங்கள் செய்யும்-துஷ்ட

            மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம்[4] நையும். - ஆண்

 

6.         பொய்யர்களை என்னுடனே உய்ய ஒட்டேனே;-மகா

            புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே. - ஆண்

 

7.         சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே;-நல்ல

            சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே. - ஆண்

 

 

- தீ. யோசேப்பு



[1] புகழ்

[2] செயல்கள்

[3] விரும்பும்

[4] உறவு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...