ஆலயம்போய்த் தொழவா ருமென்ற
ஆலயம் போய்த் தொழ வாரும்
289. ஆனந்தபைரவி ஆதிதாளம்
பல்லவி
ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்,
அனுபல்லவி
ஆலயந்தொழுவது
சாலவும்[1] நன்றென
ஆன்றோருரை[2] நெறி
சான்ற வர்க்கானதே,
ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
- ஆலயம்
சரணங்கள்
1. பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு[3]
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம்
பரன்
மாட்சி காணவே. - ஆலயம்
2. பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந்[4] தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே
இனி. - ஆலயம்
3. தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று;
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று;
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
ஒன்றவே திரு. - ஆலயம்
-
ஜி.சே. வேதநாயகம்
Comments
Post a Comment