ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
கிறிஸ்துவண்டைக்கு ஓடிவா
291. (18) புன்னாகவராளி ஆதிதாளம்
பல்லவி
ஓடிவா, ஜனமே;-கிறிஸ்து வண்டைக்
கோடிவா, ஜனமே;-பண்டிகை கொண்
டாடிவா, ஜனமே;-அவர் பாதத்தைத்
தேடிவா, ஜனமே.
அனுபல்லவி
நீடு சமர்[1] புரி
கோடி அலகையை
நிக்ரகித்து[2] வாள்
பிடித்த உக்ர மனுவேலனைக் கண்-டு-ஓடி
சரணங்கள்
1. நேர்ந்தடிகள் துதித்து,-நித்ய ஜெபத்தில்
நீதித் தவங்கள் கதித்து,
சேர்ந்தருளை மதித்து,-சோதிக்கச் செய்த
தீய சர்ப்பத்தை மிதித்து,-அநித்தியமான
ஜெக ஜாலத்தைப் பணித்து, அகத் தாக்ரமத்தை
விட்டு,
திட்டமாக நின்று, பத்துக் கற்பனைப் படியே
சென்று,
தேவ துந்துமி முழங்க,-சங் கீதங்களும்,
பா வினங்களும் விளங்க,-அதன் ஒலியால்
அண்டமும் குலுங்க, பர மண்டலங்களும் இலங்க,
ஆராதனைகள் செய்து, சீராய் நடந்துகொண்டு,
அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
உருகி நடம் செய்து, பெருகிய அன்புடன்.
- ஓடி
2. ஞானஸ்நானம் பெற்றுச்-சுருதி நூலின்
மேன்மைச் சாஸ்திரம் கற்று,
ஈனப் பாவிகள் கற்று,-மாயங்கள், அக்கி
யானக் கிரயைகள் அற்று,-மாங்கிஷத்தின்
இருளாந்த காரம் நீங்கி, அருளானந்தங்கள்
ஓங்கி,
இஷ்டமாய் நடந் தெலார்க்கும் துஷ்டத்தனப்
பொல்லார்க்கும்
யேசு நேசத்தைச் சூட்டி,-மனோகரத்தால்
பாசத் தன்பு பாராட்டிக்,-கவனமாக
அந்தி சந்தியும் ஜெபங்கள், மந்திரங்களைப்
படித்து,
ஆண்டாண்டெமைக் கரிசித்து, மீண்டாண்டானுக்கிரகித்த
அறிவுகள் இங்கித கிருபை விளங்கிய
திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ. - ஓடி
-
வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment