ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே


ஜீவ வசனம் கூறுவோம்

270. (304) மோகனம்                                                ஆதிதாளம்

பல்லவி

                   ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;
                   சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.

அனுபல்லவி

            பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
            ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. - ஜீவ

சரணங்கள்

1.         பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
            பட்டு மடியும் வேளையில்;
            பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
            வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. - ஜீவ

2.         காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு
            கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
            நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
            நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. - ஜீவ

3.         பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து நமை
            போகச் சொல்லி விதித்தாரே;
            காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
            கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து. - ஜீவ

4.         விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
            மீட்கக் குருசில் இறந்தார்;
            மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
            றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. - ஜீவ

- மா. வேதமாணிக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு